சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘ஸ்ரீராமரும் தமிழகமும் இணைப்பிரியா பந்தம்’ என்ற நூலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டார். இதில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ஹண்டே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ராமர் வட இந்தியக் கடவுள் என்றும், மாநிலத்தில் யாருக்கும் ராமரைத் தெரியாது என்றும் தமிழ்நாட்டில் ஒரு கதை கட்டப்படுகிறது.
ராமர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ராமர் எங்கும் இருக்கிறார். தமிழ்நாட்டில் ராமர் இல்லாத இடமே இல்லை. எங்கு பார்த்தாலும் அவரது கால் தடம் உள்ளது. அவர் அனைவரின் இதயத்திலும் வாழ்கிறார்” என்றார்.
மேலும் பேசிய அவர், காசி தமிழ் சங்கத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து இங்குள்ளவர்கள் வாரணாசிக்கும் ஆட்களை அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளனர் ன்று தி.மு.க மீது ஆளுநர் மறைமுகத் தாக்குதல் நடத்தினார்.
காசி தமிழ் சங்கத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து இங்குள்ள மக்கள் (திமுக அரசு) வாரணாசிக்கும் ஆட்களை அழைத்துச் செல்வதாக அறிவித்துவிட்டார்கள் என்று திமுக மீது மறைமுகத் தாக்குதலில் ஆளுநர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“