தமிழகத்திற்கு போக்கு காட்டிய ஃபனி புயலின் தற்போதைய நிலை இதுதான்!

மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்

cyclone fani

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் 4ம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல், கடந்த 6 மணிநேரத்தில் மேற்குவங்கத்தில் இருந்து வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலை 8.30 நிலவரப்படி, புயலானது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வங்கதேசத்தில் நிலை கொண்டுள்ளது.

இதுமேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து வங்கதேசத்தில் தாழ்வுநிலையாக மாறும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை முன்னெச்சரிக்கை

அடுத்த 6 மணிநேரத்தில் வங்கதேச எல்லையை சுற்றியுள்ள பகுதிகள், ஹிமாலய மலைத்தொடரை ஒட்டிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் சிக்கிமில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாபந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 6 மணிநேரத்தில் வங்கதேச எல்லையை ஒட்டிய மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்

அடுத்த 6 மணிநேரத்தில் வங்கதேச எல்லையை ஒட்டிய மேற்குவங்க மாநிலத்தில் கடல் சீற்றத்துடேனேயே காணப்படும். மீனவர்கள், அடுத்த 6 மணிநேரத்திற்கு வங்காளவிரிகுடாவின் வடமேற்கு பகுதி மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Current position of the storm cyclone fani

Next Story
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிMadhusoothanan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express