Advertisment

தமிழக அரசியல் நிலவரம் குறித்த அலசல்....!

இதற்குப் பின்னும் ஒரு திரைமறைவு சூட்சுமக் கயிறு நீள்கிறதா. இரண்டையும் முழு நம்பிக்கையுடன் ஏற்கவும் முடியவில்லை நிராகரிக்கவும் முடியவில்லை...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசியல் நிலவரம் குறித்த அலசல்....!

கண்ணன்

Advertisment

பன்னீர் வீசிய குண்டு

முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும்  இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கவே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் பன்னீர்செல்வம். அந்த குண்டின் இலக்கு மக்களா அல்லது முதல்வர் பழனிச்சாமி பிரிவினரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

விரைவில் தேர்தல்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது ‘தர்ம யுத்தப் பயண’த்தைத் தொடங்கியுள்ள பன்னீர்செல்வம் மக்களிடம் பேசுகையில் தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்றும் தொண்டர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிக்குப் பின் ’தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழலாம், மறுதேர்தல் விரைவில் வரலாம்’ என்ற எதிர்பார்ப்பு அரசியல் தலைவர்களிலிருந்து மக்கள் வரை பலருக்கும் இருக்கிறது. அப்படி வந்தால் வலுவான தலைவர்களாக யாரும் இல்லாத நிலையில் அதிமுக கட்சியும் ஆட்சியும் சிதையும் என்ற எண்ணமும் பரவலாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவுசெய்திருந்தார். அவர் பேசியதைக்கூட, ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் தனது கட்சிக்கு சாதகமான ஒரு கருத்தை முன்வைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் உத்தி என்று கடந்து செல்லலாம்.

பன்னீர்செல்வம் சொல்வதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்த அதிமுக, ஆட்சியமைத்து இன்னும் சில நாட்களில் ஒரு ஆண்டு நிறைவடையப் போகிறது. ஜெயலலிதா மறைவுக்கு முன் கட்சியில் இரண்டாவது இடம் வகிக்கும் தலைவராகக் கருதப்பட்டவரும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே அவர் சிறைவாசம் செய்த தருணங்களில் முதல்வராக நியமிக்கப்பட்டவருமான பன்னீர்செல்வம் அதிமுகவின் ஆட்சி முடிவடைய இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று சொல்லியிருப்பது சாதாரண விஷயமல்ல.

பன்னீரை எதிரொலிக்கும் பாஜக

ஜெயலலிதாவின் மறைவையடுத்து சசிகலாவை எதிர்த்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றபின் பல்வேறு தருணங்களில் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்ற சந்தேகம் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வலுவாக முன்வைக்கப்பட்டது. இதுவரை அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் பன்னீர்செல்வத்தை மத்தியில் ஆளும் பாஜக பின்னாலிருந்து இயக்குவதாக ஒரு சந்தேகம் அவர் சசிகலாவை எதிர்த்து கட்சியிலிருந்து பிரிந்து சென்ற காலத்திலிருந்தே நிலவிவருகிறது. இந்நிலையில்தான் அவர் இப்படிப் பேசியிருப்பது அந்த ஐயத்தை வலுப்படுத்துகிறது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் என்ற ஊகத்தை பன்னீர்செல்வம் முன்வைத்த அடுத்த நாளே. பாஜகவின் தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறியிருப்பதை இத்துடன் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியாது.

பன்னீரின் கருத்தை பாஜக எதிரொலிக்கிறதா அல்லது இருவரது பேச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லையா என்ற உண்மையைக் காலம்தான் உணர்த்தும்.

publive-image

எடப்பாடி அணியினரின் நிலை

பன்னீர்செல்வத்தின் கருத்தை அதிமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஜெயக்குமார் கண்டித்துள்ளார். அதே சமயம முதல்வரது அணியில் இருக்கும் அதிமுகவினர் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். பன்னீர் தரப்பினரோ சசிகலாவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும்  கட்சியிலிருந்து முழுமையாக நீக்கினால்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும் என்கின்றனர்.

பன்னீர்செல்வம் அணியினர் வெளியேறிய பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக ஜெயித்து பெரும்பான்மை ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் பிரிந்து சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு அவர்களை சேர்த்துக்கொள்ள அல்லது அதற்கு ஆயத்தமாக இருப்பதுபோல்  மக்களுக்கு காண்பிக்க அவர்கள் தயாராகவே இருப்பது உண்மையிலேயே அவர்கள் கூறிக்கொள்வதுபோல் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலா அல்லது இதற்குப் பின்னும் ஒரு திரைமறைவு சூட்சுமக் கயிறு நீள்கிறதா. இரண்டையும் முழு நம்பிக்கையுடன் ஏற்கவும் முடியவில்லை நிராகரிக்கவும் முடியவில்லை.

publive-image

நினைத்தது நடந்தால்

பன்னீர்செல்வம் சொன்னதுபோல் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால் யாருக்கும் அதிக பயன், யார் வெற்றிபெறுவார்கள் என்றெல்லாம் ஊகிக்கும் அளவுக்கு இப்போது எந்தக் கட்சியும் வலுவுடையதாக இல்லை. ஆனால் அதிமுகவுக்கு மட்டும் இந்தத் தேர்தல் அதன் வரலாற்றில் எதிர்கொண்ட ஆகப் பெரும் சவாலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Tamilnadu Ops Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment