New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Chennai-5-2.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
Advertisment
அதன்படி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட இடங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
- ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை - போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.
- வளசரவாக்கம் மெகாமார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.
- வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
- சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
- மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது, மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
- அசோக் நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.