/indian-express-tamil/media/media_files/2025/07/04/who-is-nikitha-2025-07-04-11-03-46.jpg)
Thirupuvanam custodial death: Who is Nikitha
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த நிக்கிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார்.
பின்னர் தனது காரை பார்க்கிங் செய்ய சொல்லி, அஜித்குமாரிடம் சாவியை கொடுத்தார். அவருக்கு கார் ஓட்ட தெரியாததால், மற்றொருவர் உதவியுடன் காரை அஜித்குமார் ‘பார்க்கிங்’ செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்தள்ளார்.
சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, பையில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2,200 காணவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து நிகிதா அளித்த புகாரின்பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து அஜித்குமாரை தாக்கி கொலை செய்த போலீஸார் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த நிக்கிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார். pic.twitter.com/KrhRLX2kyt
— Indian Express Tamil (@IeTamil) July 4, 2025
இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமானவர் நிகிதா. இவருக்கு வேண்டிய உயர் அதிகாரியின் தூண்டிதலின் பேரில் தான் போலீசார் தாக்கி அஜித்குமார் உயிரிழந்தாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
இந் நிலையில் நிகிதா மீது பல்வேறு புகார் காவல் நிலையத்தில் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகாரும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தேநீர் விடுதியில் இன்று காலை நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்துள்ளார் இதை கண்ட ஒருவர் தனது செல்போன் மூலம் காட்சியை பதிவு செய்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் ஆனால் காவல்துறையினர் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. சுமார் 2 மணி நேரம் அமர்ந்திருந்த நிகிதா கோவையை நோக்கி காரில் சென்றுள்ளதாக தெரிகிறது. தற்போது நிகிதா தேநீர் கடையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.