சென்னை விமான நிலையத்தில் 1.7 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் 2 சொகுசு கைக்கடிகாரங்களை பையில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
விசாரணையில், பணப் பலன்களுக்காக அந்த கடிகாரங்களை பயணி வாங்கி வந்தது தெரியவந்தது. வாட்ச் நிபுணர்களின் உதவியுடன் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அந்த கடிகாரங்கள் படேக் பிலிப்ஸ் 5740 மற்றும் ப்ரெகுட் 2759 என கண்டுபிடிக்கப்பட்டது.
படேக் பிலிப்ஸ் வாட்ச் இந்தியாவில் டீலர் இல்லை, மேலும் ப்ரெகுட் வாட்ச் மாடல் எண் 2759 இந்திய சந்தையில் ஸ்டாக் இல்லை என்பதும் தெரிய வந்தது. இந்த கடிகாரங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணியை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கடிகாரங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“