ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தல்: கோவையில் 2 பேர் கைது

சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தல்: கோவையில் 2 பேர் கைது

customs seize 3.5 kg gold at Coimbatore airport

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று சார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பயணிகள் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 6 பேரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களின் உடல் மற்றும் ஆசனவாயில் மறைத்து வைத்து 3.54 கிலோ எடையிலான சுமார் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடலூரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: