‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு எதிராக மனு; ரூ.10 லட்சம் அபராதம் செலுத்திய சி.வி.சண்முகம்; வழக்கறிஞருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த பொது நல மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த பொது நல மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
cvs hc

இதே கோரிக்கையுன் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக  வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்த பொது நல மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

மேலும், இதே கோரிக்கையுன் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் இனியன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசு முத்திரையுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என கூறியிருந்தார்.

மேலும், அரசின் திட்டத்தை, தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது என்றும் இதற்கு அரசியல் உள்நோக்கத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் செலவு செய்யப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தன்னார்வலர்கள் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினாலும்,, தி.மு.க-வினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு, தேர்தல் பரப்புரை நடத்தப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனவே, ‘உங்களுடன் ஸ்டாலின்’ விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தையும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்ட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் மற்றும் பி.வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக கூறினர். இதையடுத்து, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இனியன் தாக்கல் செய்த இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராத தொகையை சி.வி.சண்முகம் செலுத்திவிட்டதாக அரசு தரப்பு வழக்கிறஞரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: