காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி நீரின் பங்கீட்டைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பற்றாக்குறையை போக்க “ஓரளவு” தண்ணீரை உடனடியாக வெளியிடுமாறு கர்நாடகாவுக்கு திங்கட்கிழமை உத்தரவிட்டது. 2007 காவிரி நீர்ப் பிரச்னை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை 2018 ல் உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்தபடி, தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், தமிழக அரசின் அதிகாரிகள், நேரடியாக கலந்து கொண்டனர், கர்நாடகா உட்பட பிற மாநிலங்களின் பிரதிநிதிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா (ஏசிஎஸ் - நீர் வளங்கள் மற்றும் பொதுப்பணி); காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் அதன் உறுப்பினர் பட்டாபிராமன். கர்நாடகத்தின் காவிரி நீராவாரி நிகாம் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கே.ஜெய்பிரகாஷ், டி.கே. ஜோஸ், கேரளாவின் ஏசிஎஸ் (நீர் வளங்கள்) மற்றும் புதுச்சேரியின் கமிஷனர்-கம்-செயலாளர் (பொதுப்பணித்துறை) ஏ. விக்ராந்த் ராஜா. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின், CWMA இன் தலைவரும் மத்திய நீர் ஆணையத்தின் தலைவருமான ஹல்தார், அக்டோபர் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத்தில் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என்று கூறினார். மேலும், காரைக்கால் பகுதியின் பாசனத்திற்காக புதுச்சேரி அரசும் தண்ணீர் பெறுவதில் உள்ள பற்றாக்குறையை அகற்றுமாறு தமிழக அரசும் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஆணையம் மீண்டும் கூடவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகள் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், புதுச்சேரிக்கு அரை மில்லியன் கன அடி (டிஎம்சி அடி) தண்ணீரை வெளியிட அரசு ஒப்புக்கொண்டது என கூறினார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போதைய பற்றாக்குறை 33.7 டிஎம்சி அடி. ஜூன் 1 முதல், நிர்ணயிக்கப்பட்ட அளவு 119.5 டிஎம்சி அடி தண்ணீரில், செப்டம்பர் 26 வரை, கர்நாடகா 85.8 டிஎம்சி அடி வழங்கியுள்ளது. " தமிழகத்திற்கான நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா சரியாக பின்பற்றவில்லை, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முந்தைய கூட்டத்தில் தண்ணீரை விடுவிக்கும்படி ஆணையத்தால் கூறப்பட்ட போதிலும், கர்நாடகா அதை "முழுமையாக செயல்படுத்தவில்லை" என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இருப்பினும், கர்நாடகாவால் வெளியிடப்படும் நீரின் அளவு குறித்து ஹல்தார் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் “இன்றைய தேதியில், மேட்டூர் அணையில் முன்பு இருந்த சேமிப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். 30 வருட சராசரிக்குச் செல்லும்போது, இது 40-45 டிஎம்சி அடி நல்ல சேமிப்பைக் கொண்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், சில குறைபாடுகள் உள்ளன, குறைந்தபட்சம் அந்த அளவு ஈடுசெய்யப்பட வேண்டும்." என்றும் அவர் கூறினார்.
திங்கள்கிழமை காலை, மேட்டூரின் சேமிப்பு 35.774 டிஎம்சி அடி (கொள்ளளவு: 93.47 டிஎம்சி அடி), நீர் மட்டம் 73.49 அடி (முழு நிலை: 120 அடி) மீதமிருந்தது. ஆறு மற்றும் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுவது வினாடிக்கு சுமார் 7,000 கன அடி (கியூசெக்ஸ்) வரத்தை விட ஓரளவு அதிகமாக இருந்தது.
காவிரிப் படுகையின் ஒரு பகுதியில் "பற்றாக்குறை மழை" பற்றி கர்நாடகா ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும், ஆணையம் அதை ஒப்புக்கொண்டதாகவும் CWMA தலைவர் ஹல்தார் கூறினார்.
மேகதாது அணை திட்டம் தொடர்பான எந்த விவாதத்தையும் தமிழக அரசு எதிர்த்தது. மேலும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் இதை எதிர்த்ததால், இந்த விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று ஹல்தார் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.