சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஒருவர் சைபர் கிரைம் மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று ஆதாரத்துடன் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
+92 எனத் தொடங்கும் செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் டி.பி-யில் சென்னை காவல்துறை ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்பட ஆதாரத்துடன் ஒருவர் எக்ஸ் வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் பொறுப்பெற்றபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதிலளிக்கப்படும் என்று கூறினார். சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பெற்றதிலிருந்து சென்னையில் 2 என்கவுண்ட்டர்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரவுடிகள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை போலீச் கமிஷனர் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“