ஒரு கிளிக்... ரூ.1.22 லட்சம் காலி: வாட்ஸ்அப் வழியாக நடந்த மோசடி; காவலரையே சைபர் கும்பல் ஏமாற்றியது எப்படி?

வாட்ஸ்அப் குழுவில் வந்த ஒரு போலியான லிங்க்-ஐ (phishing link) கிளிக் செய்ததால், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) தலைமைக் காவலர் ஒருவர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.22 லட்சத்தை இழந்தார்.

வாட்ஸ்அப் குழுவில் வந்த ஒரு போலியான லிங்க்-ஐ (phishing link) கிளிக் செய்ததால், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) தலைமைக் காவலர் ஒருவர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.22 லட்சத்தை இழந்தார்.

author-image
WebDesk
New Update
cyber crime

ஒரு கிளிக்... ரூ.1.22 லட்சம் காலி: வாட்ஸ்அப் வழியாக நடந்த மோசடி; காவலரையே சைபர் கும்பல் ஏமாற்றியது எப்படி?

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த தலைமைக் காவலர் முகேஷ், வாட்ஸ்அப் வழியாக வந்த போலியான இணைப்பை கிளிக் செய்ததால், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.22 லட்சத்தை இழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

எப்படி நடந்தது இந்தச் சம்பவம்?

Advertisment

காவலர் முகேஷ், ஆகஸ்ட் 16 அன்று தனது வாட்ஸ்அப் குழுவில் வந்த ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்தார். அதில் இருந்த லிங்க் அவரது கவனத்தை கவர்ந்திருக்கலாம். எந்தவித சந்தேகமும் இல்லாமல், அவர் அந்த இணைப்பைக் கிளிக் செய்துள்ளார். பெரும்பாலும், இதுபோன்ற இணைப்புகள் கவர்ச்சியான தலைப்புடனோ அல்லது அவசரத் தேவை போன்ற ஒரு தோற்றத்துடனோ அனுப்பப்படுகின்றன.

இணைப்பைக் கிளிக் செய்தவுடன், சைபர் மோசடி கும்பல் அவரது வங்கிக்கணக்கு விவரங்களை அணுகுவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. உடனடியாக, முதல் கட்டமாக ரூ.10,000 அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற சிறிய தொகைகள் ஆரம்பத்தில் எடுக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அதை ஏதோ வழக்கமான இ.எம்.ஐ (அ) தவணை என நினைத்து பெரிதாக கண்டுகொள்வதில்லை. முகேஷும் அதையே நினைத்துள்ளார்.

ஆனால், மறுநாள் காலையில், அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே பரிவர்த்தனையில் ரூ.1.12 லட்சம் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். உடனடியாக தனது வங்கியை அணுகி விசாரித்தபோது, அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

வாட்ஸ்அப் குழுக்களில் வரும் இணைப்புகள் அனைத்தும் நம்பகமானவை அல்ல. தெரியாதவர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய குழுக்களில் இருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வது ஆபத்தானது. ஏனெனில், அந்த இணைப்புகள் ரகசியமாக உங்கள் மொபைல் போனை அல்லது வங்கிக் கணக்கைக் கண்காணிக்க உதவும் மென்பொருளை (spyware) நிறுவலாம் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

காவல்துறையின் எச்சரிக்கை

தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான குழுக்களில் இருந்து வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வோர்ட், ஓ.டி.பி. போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் யாரிடமும் பகிராதீர்கள். சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்கு தகவல் தெரிவித்து, உங்கள் கணக்கைப் முடக்குமாறு கோருங்கள். அவசர கதியில் செயல்படாமல், ஒவ்வொரு பரிவர்த்தனையையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: