Advertisment

ஸ்விக்கி பயனர்களை குறிவைக்கும் சைபர் மோசடி கும்பல்; வங்கி கணக்கில் பணம் அபேஸ்

லேஸிபே கட்டண செயலியை பயன்படுத்தி ஸ்விக்கி பயனர்களிடம் மோசடி; தமிழ்நாட்டு பயனர்களில் கணக்கில் ஆர்டர் செய்து வெளி மாநிலத்தில் ஆர்டர்களை கிடைக்கச் செய்யும் மோசடி கும்பல்; போலீஸ் தீவிர விசாரணை

author-image
WebDesk
New Update
சீனா உங்களை உளவு பார்க்கிறது... மென்பொருள் தாக்குதல் அபாயம் : எச்சரிக்கிறது இந்திய புலனாய்வு

லேஸிபே கட்டண செயலியை பயன்படுத்தி ஸ்விக்கி பயனர்களிடம் மோசடி; தமிழ்நாட்டு பயனர்களில் கணக்கில் ஆர்டர் செய்து வெளி மாநிலத்தில் ஆர்டர்களை கிடைக்கச் செய்யும் மோசடி கும்பல்; போலீஸ் தீவிர விசாரணை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சைபர் மோசடி செய்பவர்கள் தமிழ்நாட்டில் பிரபலமான உணவு விநியோக செயலியின் சந்தேகத்திற்கு இடமில்லாத பயனர்களைக் குறிவைத்து, அவர்களின் வங்கி கணக்குச் சான்றுகளை அணுகி தமிழ்நாட்டிற்கு வெளியே உணவு ஆர்டர்களை கிடைக்கச் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 12 வரை, தமிழ்நாட்டில் மோசடி தொடர்பான தேசிய சைபர் கிரைம் அறிக்கை போர்ட்டலில் 30 சைபர் புகார்கள் பெறப்பட்டுள்ளன,” என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள், தொலைதூரத்தில் இருந்து செயல்படுகிறார்கள், குறிப்பாக லேஸிபே (LazyPay) செயலி கணக்கை தங்கள் உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கி (Swiggy) உடன் இணைத்தவர்களை குறிவைக்கிறார்கள். இந்த LazyPay அதன் பயனர்களை ஆன்லைனில் பொருட்களை வாங்கவும் பின்னர் பணம் செலுத்தவும் அனுமதிக்கிறது.

சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், சமீபத்தில் தனக்கு லேஸிபேயில் இருந்து வந்ததாகக் கூறி தொலைப்பேசி (IVR) அழைப்பு வந்ததாகக் கூறினார். நீங்கள் செய்த பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்டதாக இல்லாவிட்டால், அவரது மொபைல் போனில் பெறப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடுமாறு அழைப்பாளர் கூறினார். ”இது ஒரு IVR அழைப்பு என்பதால் இது உண்மையானது என்று நினைத்தேன். நான் OTPயை உள்ளிட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு ரூ.4,979க்கான பரிவர்த்தனை செய்யப்பட்டதைக் கவனித்தேன். நான் LazyPay வாடிக்கையாளர் சேவையை அழைத்து எனது கணக்கை முடக்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து, கன்னடத்தில் பேசிய ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது, நான் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளதாகக் கூறி, இருப்பிடத்தைக் கேட்டார். நான் எந்த ஆர்டரும் கொடுக்கவில்லை என்று சொன்னேன். எனது Swiggy கணக்கில் உள்நுழைய முயற்சித்தபோது, ​​அணுகல் தடுக்கப்பட்டதைக் கண்டேன். மோசடி செய்பவர் எனது வங்கி கணக்குச் சான்றுகளைப் பயன்படுத்தி கர்நாடகாவில் உணவை ஆர்டர் செய்துள்ளார்,” என்று புகார்தாரர் கூறினார்.

இதே பாணியில் ஏமாற்றப்பட்ட சென்னையில் உள்ள தாம்பரத்தைச் சேர்ந்த மற்றொரு ஸ்விக்கி பயனர், ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு 100 க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.,கள் வந்ததாகவும், இறுதியாக குர்கானில் உள்ள Lazypay மூலம் ஸ்விக்கியைப் பயன்படுத்தி தெரியாத நபர் ஒருவரால் பல ஆர்டர்கள் மூலம் ரூ.9,938 மதிப்பில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி செய்பவர்கள் IVR அழைப்புகளைப் பயன்படுத்தி, அவர்கள் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால், '1' ஐ அழுத்தி, OTP எண்ணை உள்ளிடுமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கின்றனர். மோசடி செயல்பாட்டின் போது பல எஸ்.எம்.எஸ்.,கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்ததாக அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். "பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்குச் சான்றுகள் மறைமுகமாகப் பயன்படுத்தப்படும்போது, ​​அவர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு திசை திருப்பும் தந்திரம் இது" என்று அந்த அதிகாரி கூறினார்.

பணம் செலுத்தத் தவறினால் அவர்களின் சிபில் (CIBIL) ஸ்கோரை (கடன் தகுதி) பாதிக்கும் என்று முகவர்களிடமிருந்து அழைப்புகள் வருவதால் ஏமாற்றப்பட்டவர்கள் இறுதியில் பணத்தை LazyPay க்கு செலுத்த நேரிடுகிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் டி.அசோக் குமார் கூறுகையில், “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொலைதூர இடங்களில் இருந்து செயல்படும் சைபர் மோசடி செய்பவர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர். உண்மையான பயனர்களின் சான்றுகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் உணவு மற்றும் பெரும்பாலும் மது பாட்டில்களை (டெல்லி/குர்கானில்) வாங்கியது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு மீறல் பயனர் தரவு கசிந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின்படி, Swiggy மற்றும் Lazypay நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு மீறல் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளோம்,” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற 

Cyber Crime Swiggy Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment