/tamil-ie/media/media_files/uploads/2019/04/Cyclone-Fani-FONI.jpg)
Cyclone Fani: வட தமிழகத்தை ஃபனி புயல் தாக்கும் என கடந்த சில நாட்களாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இந்த ஃபனி புயலால் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், இதனால் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.
India Meteorological Department On Cyclone Fani
இந்நிலையில் தற்போது இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஃபனி புயல் சென்னைக்கு தென் கிழக்கே 1050 கி.மீ தொலைவிலும், ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்தின் தென் - தென் கிழக்குப் பகுதியில் 1230 கி.மீ தூரத்திலும், இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு - தென் கிழக்கே 745 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் உருவெடுக்கும்.
மே 1-ம் தேதி வட மேற்கு திசையில் ஃபனி புயலானது நகர்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகம் மற்றும் ஆந்திராவின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
80 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும் காற்றின் வேகம் இன்று மாலைக்குள் 115 கிலோ மீட்டராக அதிகரிக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.