Tamil Nadu Weather Report Today: தமிழக மக்களிடையே ஃபனி புயல் குறித்த அச்சம் மேலோங்கி உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை மாதத்தில் வரவிருக்கும் ஃபனி புயல் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பதால் மக்கள் பீதியுடன் அன்றாட பணிகளை கவனித்து வருகின்றனர்.
குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ஃபனி குறித்த அப்பேட்டுகளை சமூகவலைத்தளங்கள் மற்றும் ஸ்மார்ஃபோன்கள் மூலம் உடனுக்குடன் தெரிந்துக் கொள்கின்றனர். இந்த தகவல்களை வைத்து புயல் எப்படி வீசும், எப்படி கரையை கடக்கும் என்பதை நேரடியாக சென்று பார்க்கலாம் என்று கையில் ஃபோனை எடுத்துக் கொண்டு ஆர்வகோளாறில் புறப்பட்டு செல்ல தயாராகும் எண்ணம் கொண்டவர்களுக்கு தான் இந்த பதிவு.
Tamil nadu weather report today in tamil: வானிலை நிலவரம்
cyclone Fani, Chennai Weather Forecast: பொதுமக்கள் செய்ய வேண்டியவை
புயல் என்பது சாதாரணமானது இல்லை. நாம் கணித்ததை விட அதன் பாதிப்பு மற்றும் இடர்பாடு அபாயகரமானதாக இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் அதிக பொறுமையுடன் இருக்க வேண்டும். புயல் நேரத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்தும் இந்த சிறப்பு பகிர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை இந்த தகவல்களை அதிகளவில் பகிர்ந்து மக்களிடயே விழிப்புண்ர்வு ஏற்படுத்துங்கள்.
1. புயலின் போது செய்யக் கூடியவை:
டார்ச் லைட் போன்றவற்றில் பயன்படும் பேட்டரிகளை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் அதனை பிளாஸ்டிக் பைகளில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. முக்கிய ஆவணங்கள், பேப்பர்கள், புத்தகங்கள் போன்றவறை நீர் புகாத பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
3. குறைந்தது 1 வாரத்திற்கு தேவையான உணவு,நீர், மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
4. கயிறு, டார்ச் லைட், கத்தி, முதலுதவி பெட்டி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை எளிதாக எடுக்கும் இடத்தில் வைத்து அவசரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
5. வீட்டில் இருக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். டிவி பார்பதை தவிர்த்து ரேடியோவை கேட்க வேண்டும்.
6. மழை நிரீல் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கைத்தடியை பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும்.
நெருங்கும் புயல்.. தயார் நிலையில் மீட்புக் குழுவினர்!
7. புயலுக்கு முன்பு உங்களை எப்படி தயார் செய்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
1. புயலின் போது செய்யக் கூடாதவை:
வதந்திகளை நம்பக் கூடாது. பதற்றத்தை குறைக்க வேண்டும்.
2. மழை அல்லது புயல் நேரத்தில் மரத்திற்கு அடியில் வாகனங்களை நிறுத்த கூடாது. குடிநீரை வீணாக செலவழிக்க கூடாது.
3. புயல் கரையை கடக்கும் போது வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சார்ஜ் போடும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
4. காற்றின் வேகம் குறைந்தவுடன் புயல் கரையை கடந்து விட்டதாக எண்ண வேண்டும்.
5. புயல் மற்றும் மழையால் சேதமடைந்த கட்டங்களுக்குள் செல்ல வேண்டாம்.
6. மின்சாதனங்கள் ஈரமான இருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.