Cyclone Fani: ஃபனி புயல் நகரும் பாதை முழு விவரம், 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி

chennai weather forecast: புயல் காரணமாக தமிழகம், ஆந்திரம், மற்றும் ஒடிசாவின் கடற்கரை மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

cyclone fani

Fani Cyclone Direction And Chennai Weather Forecast: கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக் ஆஃப் தி டவுனாக இருக்கும் ஃபனி புயல் சென்னையை நோக்கி நகரவில்லை என்றாலும், தன்னுடைய திசையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. வங்கம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபனி புயல் காரணமாக தமிழகம், ஆந்திரம், மற்றும் ஒடிசாவின் கடற்கரை மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபனி புயலின் திசை, தாக்கம், மழை, வேகம், புயற்காற்று தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் நொடிக்கு நொடி அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன்!

மேலும் படிக்க : ஃபானி புயல் தொடர்பாக நேற்று வரை எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்து கொள்ள

IMD Weather Forecast, Cyclone Fani In Bay Of Bengal Today: இன்றைய வானிலை அறிக்கை

இன்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக கருமேகங்களால் சென்னை மாநகரம் சூழப்பட்டுள்ளது. இன்று காலை வானிலை ஆய்வு அறிக்கையின் படி ஃபனி புயலானது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 710 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மச்சிலிப்பட்டிணத்திற்கு தென்கிழக்கே 810 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபனி புயலானது கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 13 கி.மீ என்ற வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இந்த திசையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.

Live Blog

Fani Cyclone Direction: ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர் !


16:04 (IST)30 Apr 2019

Madurai, Ooty Weather: மழையால் குளிர்ந்த மதுரை, ஊட்டி

அனல் வெயில் மிரட்டலுக்கு இடையே மதுரை, உசிலம்பட்டி, மேலூர், சேலம், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் வெப்ப நிலை தணிந்தது.

15:49 (IST)30 Apr 2019

Tamil Nadu Weatherman Post Today: அனலில் சிக்கிய சென்னை, இது டிரெய்லர்தான்: தமிழ்நாடு வெதர்மேன்

இன்று காலையில் மேகமூட்டமாக காணப்பட்ட சென்னை, பிற்பகலில் அனலைக் கக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த தனியார் வானிலை ஆர்வலரும் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான், ‘சென்னை முதல்முதலாக 40 டிகிரி வெப்ப நிலையைத் தொட்டிருக்கிறது. இது டிரெய்லர்தான்.

இன்றும், நாளையும் லேசான மேகமூட்டம் இருக்கலாம். புயல் சென்னை அருகேயிருந்து வட கிழக்கு திசையில் நகரும்போது இங்கிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பதால், வெப்பநிலை வட மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடுமையாக எகிறும்’ என கூறியிருக்கிறார்.

14:12 (IST)30 Apr 2019

Fresh Alerts To Fishermen: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் ஃபனி புயல் அதி தீவிரப் புயலாக உருவெடுத்திருப்பதால், மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

12:52 (IST)30 Apr 2019

Fani Cyclone Direction: ஃபனி புயல் 3-ம் தேதி ஒடிஸாவில் கரையைக் கடக்கும்- பாலச்சந்திரன் பேட்டி

வங்கக் கடலில் நகர்ந்து வரும் ஃபனி புயல் சென்னைக்கு தென் கிழக்கே 570 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், மே 3-ம் தேதி இந்தப் புயல் ஒடிஸாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

11:17 (IST)30 Apr 2019

Fani Cyclone, Central Fund Allotted to 4 States: ஃபனி புயல் பாதிப்பை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ 309 கோடி மத்திய அரசு ஒதுக்கியது

ஃபனி புயலால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு இல்லை என்றாலும், முன் எச்சரிக்கை தமி
நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு மொத்தம் 1086 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது.

இதில் தமிழகத்தின் பங்காக 309 கோடி ரூபாய் வழங்கும். மத்திய உள்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

10:32 (IST)30 Apr 2019

update on fani cyclone: நாளை மாலையில் உச்சபட்ச தீவிர புயலாக உருவெடுக்கும் ஃபனி

மே 1-ம் தேதி மாலை 5.30 மணி வரை அதி தீவிர புயலாக இருக்கும் ஃபனி, அதன் பிறகு உச்சபட்ச தீவிர புயலாக உருவெடுக்கிறது. ஆனால் வானிலை ஆய்வு மையக் கணிப்புபடி, அந்த நேரத்தில் புயல் வட கிழக்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகர ஆரம்பித்துவிடுகிறது. எனவே சென்னைக்கு ஆபத்து இல்லை. மே 3-ம் தேதி மாலை வரை உச்சபட்ச தீவிர புயலாகவே அது இருக்கும்.

மே 4-ம் தேதி காலை முதல் அதி தீவிரப் புயல், தீவிர புயல் என கொஞ்சம் கொஞ்சமாக வலு இழக்கும்.

09:38 (IST)30 Apr 2019

Cyclone Fani Path: சென்னையில் இருந்து 660 கி.மீ தொலைவில் ஃபனி புயல்

சென்னைக்கு 660 கி.மீ தொலைவில் ஃபனி புயல் மையம் கொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 16 கி.மீ வேகத்தில் அது பயணிக்கிறது.

மே 1-ம் தேதி மாலை வரை வட மேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், பின்னர் வடகிழக்காக நகர்ந்து ஒடிசாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09:11 (IST)30 Apr 2019

அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உறுமாறும் ஃபானி

மெல்ல மெல்ல கரையை நோக்கி நகரும் ஃபானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவுடைய புயலாக உருமாறும். காற்றின் அளவு அதிகரிக்க கூடும். கரையை நெருங்கும் போது சுமார் 200 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 கி.மீ வரை சென்னை நோக்கி பயணித்து ஒடிசா நோக்கி வடமேற்காக திசை மாறுகிறது இந்த புயல்.

09:04 (IST)30 Apr 2019

Chennai Temperature Today – வெப்பநிலை

இன்று சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸூம், குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸூம் பதிவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08:53 (IST)30 Apr 2019

காற்றின் வேகம் எவ்வளவு இருக்கக் கூடும் ?

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதோடு, காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். கரையைக் கடக்கும் போது சுமார் 200 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

08:41 (IST)30 Apr 2019

Heavy rainfall warning : அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உண்டா ?

தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் இன்று முதல் மே 2ம் தேதி வரை மழைக்கான வாய்ப்புகள் உண்டு. மே 3ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். 

Fani Cyclone Affecting Areas: ஃபனி புயல் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக அவருடைய ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருக்கிறார். மேலும் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து வித உதவிகளையும் உடனே செய்யக் கோரி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cyclone fani live updates chennai weather landfall may happen at odisha

Next Story
‘சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு ஏன் ஒத்துழைக்க மறுக்கிறது?’ – ஐகோர்ட் கண்டனம்Kanyakumari constituency Voters list name removed issue
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express