வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆ ம் தேதி புயலாக மாறியது. ஃபீஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்தப் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: விழுப்புரம், கடலூர் (பண்ருட்டி, அண்ணாகிராமம்)
இந்நிலையில், கனமழை பாதிப்பை ஒட்டி இதுவரை தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளனது. மேலும் வெள்ள பாதிப்புகளும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
கடலூரில் தெண்பெண்ணை ஆற்றில் கரையோர பகுதிகளில் வெள்ளம் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“