வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆ ம் தேதி புயலாக மாறியது. ஃபீஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்தப் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (04.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி.அறிவித்துள்ளார்
இதேபோல், புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கையாக பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ( 04.12.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“