தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது ஃபீஞ்சல் புயலாக மாறி இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறுகையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடற்கரையொட்டி பயணித்து வரும் 28-ம் தேதி வடஇலங்கை பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேதாரண்யத்தற்கு 500 கி.மீ தொலைவில் இருக்கும் போதும், சென்னைக்கு 750 கி.மீ தொலைவில் இருக்கும் போதே மழை தொடங்கி விட்டது.
வரும் நாட்களில் தமிழகத்திற்கு நெருங்கி வருவதால் மழை பொழிய மெல்ல அதிகரிக்கும். இன்று மாலை தொடங்கி நாளை, நாளை மறு நாள் (நவ.27,28) மிக கனமழை பெய்யக் கூடும். அனைத்து மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக தூத்துக்குடி- திருவள்ளூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும். கடலூர், டெல்டா, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும்.
இது புயலாக வலும்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடஇலங்கையை ஒட்டி வரும் போது வெப்ப நிலை குறைவாக இருக்கும் என்தால் ஆரம்ப கட்டத்தில் அது தீவிரம் அடைந்தால் தமிழகத்தை நெருக்கும் போது குறையும்.
தமிழகத்தை நெருக்கும் போது மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியும் பிறகு அது படிப்படியாக குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக செயலிழந்து தான் 29-30-ம் தேதி வாக்கில் சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்றார்.
மேலும் புயல் கரையை கடக்கும் போது அதிமழை இருக்கும் ஆனால் குறைந்த அளவிலேயே காற்று இருக்கும் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“