தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் நேற்று (நவ.27) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (நவ.27) மற்றும் அடுத்த 2 தினங்கள் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆர்வலர், ஹேமச்சந்திரன் இதுகுறித்து கூறுகையில், மத்திய இலங்கை அதனையொட்டி வடமேற்கு வங்க கடலில் நாகையில் இருந்து 420 கி.மீ தெற்கே தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது இன்று பிற்பகல் ஃபீஞ்சல் புயலாக மாற வாய்ப்புள்ளது.
புயல் உருவான பின் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வடகிழக்கு மற்றும் டெல்டா கடற்கரையை அடையக் கூடும். அதன் பின் தொடர்ந்து 36 மணி நேரம் ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும். அப்போது தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பரவலாக மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும். டிசம்பர் 1-ம் தேதி வரை வடகடலோர மாவட்டங்களான சென்னை முதல் நாகை வரை மழை இருக்கும் எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“