ஃபீஞ்சல் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளில் டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) நள்ளிரவு புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தோடர் கனமழையால், புதுச்சேரியில் பிரதான சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
அதன்படி, கனமழை காரணமாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று டிசம்பர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதே போல, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக உதகை, கூடலூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஃபீஞ்சல் புயலின் தாக்கத்தால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளில் இன்று டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.