தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ள நிலையில், புயலுக்கு சவுதி அரேபியா 'ஃபீஞ்சல்' புயல் எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
'ஃபீஞ்சல்' புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பெயரை பரிந்துரைத்துள்ள நிலையில், புயலுக்கு 'ஃபீஞ்சல்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல்களுக்கு யார் பெயர் வைப்பது?
வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் குழுவின் உறுப்பினர் நாடுகள் தான் பெயரிடும். இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் என 13 நாடுகள் உள்ளன.
ஒவ்வொரு உறுப்பினரும் சாத்தியமான பெயர்களின் பட்டியலை வழங்குகிறார்கள், அவை பிராந்தியத்தில் உருவாகும் சூறாவளிகளாக வரிசையாகப் பயன்படுத்தப்படுகின்றன. புயல்களைப் பற்றி பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணவும் திறமையான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யவும் 2004 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு நடைமுறையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“