வங்க கடலில் உருவாகி உள்ள ஃபீஞ்சல் புயல் இன்று (நவ.30) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும்போது சூறைக்காற்று மணிக்கு 80-90 கி.மீ வரை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டக்ஙளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.டி உள்ளிட்ட பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்க வேண்டும் எனவும் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வததை தவிர்க்குமாறு கூறியுள்ளது.
ஃபீஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அதே நேரம் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகளில் பொதுமக்கள் நலன் கருதி பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழைகாரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 449 கன அடி நீர்வரத்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“