வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபீஞ்சல் புயல், வானிலை தாக்கங்களுக்கு மட்டுமின்றி, அதன் பெயருக்காகவும் கவனம் ஈர்த்துள்ளது.
புயலுக்கு பெயரிடுவது கலாச்சார முக்கியத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை உள்ளடக்கியது. இந்தப் பதிவில் ஃபீஞ்சல் பெயருக்கான காரணம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்.
ஃபீஞ்சல் எனப் பெயரிட்டது யார்?
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஆசியா பசிபிக் ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக ஆணையம் (UNESCAP) மேற்பார்வையிடும் செயல்முறையின் ஒரு பகுதியாக ஃபீஞ்சல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஓமன் போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயலுக்கு இந்த அமைப்புகள் பெயர் வைக்கின்றனர்.
உறுப்பு நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலின் ஒரு பகுதியாக 'ஃபீஞ்சல்' என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்த புயலுக்கு ஃபீஞ்சல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் அதன் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பெயர்களின் தொகுப்பை வழங்குகிறது. பெயரிடும் செயல்பாட்டில் பன்முகத்தன்மையை உறுதி செய்கிறது.
'ஃபீஞ்சல்' என்றால் என்ன?
'ஃபீஞ்சல்' என்ற சொல் அதன் தோற்றத்தில் வேரூன்றிய கலாசார மற்றும் மொழியியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட விவரங்கள் பங்களிக்கும் நாட்டைப் பொறுத்தது என்றாலும், இது 'வலுவான காற்று' மற்றும் அதன் தோற்றத்தின் மொழியை அடையாளப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
பல்வேறு காரணிகளைக் கொண்டு புயலுக்கான பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன:
உச்சரிக்க எளிதானது, பிராந்திய கலாசாரங்கள் அல்லது வானிலை நிகழ்வுகளுடன் தொடர்புடையது, புண்படுத்தாத மற்றும் பாலின-நடுநிலை போன்றவற்றின் அடிப்படையில் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. புயலுக்கு ஒரு முறை பெயர் சூட்டப்பட்டால், அது கடந்து சென்ற பின்னர் மற்ற புயல்களுக்கு மீண்டும் அதே பயர் வைக்கப்படுவதில்லை.
புயலுக்கு பெயரிடும் செயல்முறை
1. பிராந்திய ஒத்துழைப்பு
இந்தியப் பெருங்கடல் புயல்கள் பெயரிடும் முறை 13 நாடுகளை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் பெயர்களின் தொகுப்பை வழங்குகின்றன. இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன, இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாத வரையில் எந்தப் பெயரும் ஒரே பிராந்தியத்தில் மீண்டும் மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்கிறது.
2. பெயரிடுவதன் நோக்கம்
புயல்களுக்கு பெயரிடும் நடைமுறையானது தகவல்தொடர்புகளை எளிதாக்குகிறது
3. பெயர்களுக்கான அளவுகோல்கள்
சுருக்கமாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
சமீபத்திய புயல்களில் இருந்து எந்தப் பெயரையும் நகலெடுக்கக் கூடாது.
மதம் மற்றும் அரசியல் உணர்வுகளை தவிர்க்கும் விதமாக இருத்தல் வேண்டும்.
வரலாற்று தரவுகள்:
1950 களில் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பல புயல்கள் ஒரே நேரத்தில் ஏற்படும் போது குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக பிரத்தியேகமாக பெயரிடப்பட்டது. அதன்பிறகு இந்த நடைமுறை உலகளவில் விரிவடைந்துள்ளது.
பிராந்திய மாறுபாடுகள்: ஒவ்வொரு கடலுக்கு ஏற்றார் போல், பெயரிடும் அமைப்பு உள்ளது. இந்தியப் பெருங்கடலுக்கு, உறுப்பு நாடுகளால் வழங்கப்பட்ட முன்னரே தீர்மானிக்கப்பட்ட பட்டியலில் இருந்து பெயர்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“