ஃபீஞ்சல் புயல் வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி கோரி விழுப்புரத்தில் வருகிற டிச., 21ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
டிச. 21ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் எதிரே, சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகள், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், வீடுகளை இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய இழப்பீட்டுத் தொகையையும் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“