Cyclone Gaja : தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மற்றும் கடலோர கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது என மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீவிர புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறி தமிழகத்தை ஒரு காட்டு காடி வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Read More: Gaja Cyclone Alerts: கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்
Cyclone Gaja : கஜ புயல் நேரத்தில் செய்ய வேண்டியது செய்யக் கூடாதது என்ன?
இந்நிலையில் இந்த புயல் தாக்கத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
புயலுக்கு முன்:
- தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்... எந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் இருப்பது அவசியம்.
- உங்கள் செல்போன்களை முழு சார்ஜில் வைத்துக்கொள்வது கட்டாயம். இணையத்தள சேவைகள் பாதிக்கப்படும் நிலையில், எஸ்.எம்.எஸ் பயன்படுத்துங்கள்.
- ரேடியோ, டிவி மற்றும் செய்தித்தாள்களை படித்து முழு விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
- உங்களின் முக்கிய ஆவணங்கள் தண்ணீர் பாதிக்கப்படாமல் இருக்கு வாட்டர் புரூஃப் பெட்டிகளில் அல்லது கவர்களில் போட்டு வைக்கவும்.
- அவசரத்திற்கு தேவைப்படும் மருந்துப் பெட்டி மற்றும் தேவைப்படும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் மாதவிடாய் நாட்களை நெருங்குகிறீர்கள் என்றால் சேனிட்டரி பேட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால், அவர்களையும் வீட்டின் உள்ளே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லவே கூடாது. உங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைப்பது அவசியம். குறிப்பாக நீங்கள் வைத்திருக்கும் ரேடியோவிற்கு கூடுதல் பேட்டரிகளை வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் தொடர்பில் இருங்கள்.
புயல் வீசும் நேரத்திலும், புயல் வீசி முடித்த பின்னும் :
- புயல் காற்று அதிகமாக வீசும் நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விடுங்கள். இது உங்களை ஆபத்துகள் நேராமல் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
- வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்துக் கொண்டால் நல்லது.
- ஒருவேளை நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தால் யோசிக்காமல் இடத்தை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிடுங்கள்.
- சுடு தண்ணீர் மட்டுமே அருந்துங்கள். உடல் ஆரோக்கியம் முக்கியம்.
- அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்.
புயல் வீசும் நேரத்தில் வெளியே இருந்தால் என்ன செய்வது?
- பாதிப்பு அடைந்துள்ள கட்டிடத்திற்குள்ளே செல்ல வேண்டாம். பாதிக்கப்பட்டிருக்கும் தளத்திற்கு கீழே நிற்க வேண்டாம்.
- தெருவில் செல்லும்போது மின்சார கம்பி அல்லது கூர்மையான பொருட்கள் கண்டால் பாதுகாப்பாக செல்லவும்.
- பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கி நிற்பது அவசியம்.
கஜ புயல் குறித்த Live Updates செய்திக்கு