கஜ புயல் : பாரபட்சமின்றி தமிழக அரசை பாராட்டி தள்ளும் அரசியல் பிரமுகர்கள்

cyclone gaja : கஜ புயலின் சிற்றத்தில் இருக்கும் மக்களை காப்பாற்றும் மூயற்சியில் ஈடுபட்டுள்ள அரசுக்கும் பேரிடம் குழுவுக்கும் அரசியல் தலைவர்கள் பாராட்டு

வங்கக் கடலில் உருவாகிய கஜ புயல், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது. இந்த புயல் இன்று அதிகாலை அதிராம்பட்டினத்தில் முழுமையாக கரையை கடந்தது.

இந்த புயலின் சீற்றத்திற்கு தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

cyclone gaja : கஜ புயல் : அரசியல் தலைவர்கள் பாராட்டு

மேலும், இந்த இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றி, காப்பாற்றி வரும் பேரிடர் மீட்பு படையினரை தமிழக அரசு பாராட்டியுள்ளது. இதை தொடர்ந்து பிற கட்சிகளை சேர்ந்த் அரசியல் தலைவர்களும் இவர்களை பாராட்டியுள்ளனர்.

மு.க. ஸ்டாலின், திமுக :

“கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!” என்று தெரிவித்திருக்கிறார்

ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் :

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புயல் நிலவரம் குறித்து அலைபேசியில் பேசி தெரிந்து கொண்டார். அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் ராஜ்நாத் சிங். அதில் “ மாநில அரசிற்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் மத்திய அரசு விரைந்து செய்யும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்:

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மய்யம் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

ஆர்.பி. உதயகுமார், வருவாய்த் துறை அமைச்சர் :

“கஜா புயல் முன்னெச்சரிக்கையாக, நாகை மாவட்டத்தில் 102 முகாம்கள் திருவாரூர் மாவட்டத்தில் 160 முகாம்கள் கடலூர் மாவட்டத்தில் 90 முகாம்கள் தஞ்சை மாவட்டத்தில் 58 முகாம்கள் ராமநாதபுரத்தில் 13 முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 82,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனார்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close