Cyclone Gaja restoration : ஐந்து நாட்கள் வங்கக் கடலில் இருந்து மெதுவாக நகர்ந்து பின்னர் அதிக பலத்துடன் நாகையைத் தாக்கியது கஜ புயல். வேதாராண்யம் பகுதியில் ஒவ்வொரு சாலையும், ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு மின்கம்பமும், மின் மாற்றியும், மரங்களும், அதன் கிளைகளும் நொறுங்கி சின்னாபின்னமாகி போனது. பெட்ரோல் பேங்குகளின் மேற்கூரையும், சிறிய சிறிய பேருந்து நிறுத்தங்கள் வரை பயங்கரமான சேதாரம் ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு கடலூர் பகுதியை தாக்கிய தானே புயல் ஏற்படுத்திய அழிவைக் காட்டிலும் 10 மடங்கு அழிவினை உண்டாக்கியிருக்கிறது கஜ புயல். நாகை மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப 1 மாதத்திற்கும் மேலாகும்.
Cyclone Gaja restoration : மாநில அரசின் முன்னேற்பாடுகள்
மாநில அரசும் தன்னால் இயன்ற அளவிலான முன்னேற்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. களத்தில் நின்று பணியாற்ற சுமார் 15 குழுக்கள் நாகைக்கு முன்னதாகவே அனுப்பபட்டிருந்தன. ஒவ்வொரு குழுவையும் துணை மாவட்ட ஆட்சியர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினர். ஆனாலும் இந்த பேரழிவு எதிர்பாராதது தான்.
நிவாரணப் பணிகளில் தொய்வு
கஜ புயலில் பாதிப்பிற்கு உள்ளான மக்கள் வேண்டிக்கொள்வது எல்லாம் தங்களின் வீட்டிற்கு ஒரு தர்பலீன் மேற்கூரைதான். ஆனால் பல்வேறு இடங்களில் மக்களுக்கு இதுவும் கிடைக்கவில்லை என்ற கோபம் நிலவி வருகிறது. மேலும் நாகை மற்றும் திருவாரூர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பினை பார்க்க இருந்த முதலமைச்சரின் பயணம் மோசமான வானிலையால் தடை செய்யப்பட்டத்து.
மேலும் படிக்க : முதலமைச்சர் நிவாரண நிதியில் பணம் அனுப்புவது எப்படி ?
பல்வேறு இடங்களில் மின்சாரம் வழங்குவதில் தொய்வு ஏற்பாட்டிருக்கிறது. தமிழ்நாடு ஜெனரேசன் மற்றும் டிஸ்ட்ரிபூசன் கார்ப்பரேசன் ஊழியர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பனை மரங்கள் தவிர கஜ புயலிற்கு ஒரு மரங்களும் தாக்குப் பிடிக்கவில்லை. தென்னை, முருங்கை, புளிய மரம், மாமரம் என அனைத்தும் புயற்காற்றில் சின்னாபின்னமாய் போனது. நாகை, தஞ்சை, மற்றூம் திருவாரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 30,000 ஹெக்டேர் பரப்பளவில் விலை நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறனர். சாலைகளில் விழுந்திருக்கும் ஒரு மரத்தினை அப்புறப்படுத்த 1600 ரூபாய் செலவாகும் என்று விவசாயத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியிருக்கிறார்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது தான் இப்போது மிக முக்கியமான விசயம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.