Advertisment

சென்னையில் பால் விற்பனை பழைய நிலைக்கு சீரானது- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

இன்று காலையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு இதுவரை இருந்த அழுத்தம் இல்லாமல் இப்போது பழைய நிலைக்கு வந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Mano thangaraj

Minister Mano Thangaraj

சென்னையில் பால் விற்பனை பழைய நிலைக்கு சீரானது. நேற்று அதிகபட்சமாக 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் என மழையால் பாதிக்கப்பட்ட பால் உற்பத்தில் நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

Advertisment

மிக்ஜாம்புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்துனர். பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் ஆவின், தனியார் நிறுவன பால் பாக்கெட்கள் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தனர். குறைவான அளவு பால் வந்ததால், அதையும் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவானது.    

இந்நிலையில் சென்னையில் பால் விற்பனை பழைய நிலைக்கு சீரானது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

சென்னை அடையாரில் உள்ள ஆவின் பாலகத்தில் இன்று காலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’இன்று காலையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு இதுவரை இருந்த அழுத்தம் இல்லாமல் இப்போது பழைய நிலைக்கு வந்திருக்கிறது.

பல இடங்களில் பால் வாங்க வந்த முகவர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் குழுவையும், உயர் அலுவலர்களையும், எங்களோட இணைந்து பணியாற்றிய பணியாளர்களையும் பாராட்டினர்.

இது பெரிய சவாலான சூழல். குறைந்த பட்சம் 450 மி.மி. அதிகபட்சம் 650 மி.மி மழை பெய்திருக்கிறது. ஒரு ஆண்டுகாலம் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.

இதில் பல ஆவின் பிளான்ட்களில் தண்ணீர் ஏறியது. பணியாளர்கள் வந்து சேரமுடியவில்லை. அவர்களின் வீடுகளும் தண்ணீரில் மூழ்கி இருந்தது. இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது.

இதனால் பால் எப்படி கொண்டு வருவது? தயார் செய்த பாலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்பது சவாலான விஷயமாக இருந்தது.

இப்போது பல முயற்சிகள் எடுத்ததால் நமது பிளாண்ட் நேற்றைய தினத்தில் இருந்து முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் நகரத்துக்கு கொடுக்கக் கூடிய பாலை விட அதிகளவு பால் சப்ளை பண்ணி இருக்கிறோம்.

இதையும் தாண்டி நான் உடனடியாக அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொலை தூரத்தில் மாட்டி இருக்கக் கூடிய, தண்ணீரில் இருக்கக் கூடியவர்களுக்கு விநியோகிப்பதற்காக போதுமான அளவு பால் பவுடர் ஸ்டாக் பண்ணினோம்.

நேற்று  முன்தினம் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வில் வாங்கக் கூடிய சூழல் இருந்தது. நாங்கள் எடுத்த நடவடிக்கையால் நேற்றைய தினம் இது சரியாகி, வழக்கமான நிலைக்கு வந்தது.

இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டிய முதல்வர், எங்களோடு பயணித்த உயர் அலுவலர்கள், ஒவ்வொரு பணியாளர்கள் எல்லாருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்’, என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

chennai flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment