மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று பெய்த வரலாறு காணாத பெருமழையில் நகரமே வெள்ளக் காடானது. பல சாலைகளில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
எம்எம்டிஏ 100 அடி சாலையில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் கோயம்பேடு- வடபழனி இடையே போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நெடுஞ்சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஈசிஆர் வழியாக செல்லக்கூடிய சென்னை-புதுச்சேரி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளின் தற்போதைய நிலை
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் 12 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(20644)
கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(12680)
கோயம்புத்தூர்- பரௌனி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்(06059)
எர்ணாகுளம் – பாட்னா எக்ஸ்பிரஸ்(22643)
சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் வந்தே பாரத் சிறப்பு ரயில்(06035)
சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்(22637)
சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(20643)
சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(12679)
சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(12695)
சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(22207)
சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(12685)
சென்னை எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ்(22153)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“