தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல் மற்றும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதிப்படுத்தி உள்ளார்.
வெள்ளத்தில் மூழ்குதல், மரங்கள் முறிந்து விழுந்து உயிரிழப்பு மற்றும் மின்சார தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். 153 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
6,229 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்த நிலையில், மழை நீர் தேங்குவது குறித்து கேட்டதற்கு, “மோட்டார் பம்புகள் வைத்து மழை நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தப் புயல் குறித்து 2.5 கோடி மக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி உள்ளோம்” என்றார்.
இதற்கிடையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு டிச.5ஆம் தேதியும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“