புயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்

கொச்சின் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் போடிமெட்டில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

cyclone tauktae OPS visited cyclone damaged areas

cyclone tauktae OPS visited cyclone damaged areas : அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமை அன்று டவ்தே புயலாக உருமாறி, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் இந்த புயல் உருவான காரணத்தால் அரபிக் கடலோர மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்திருக்கும் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் மலையை ஒட்டிய பகுதிகளான ஊத்தாங்கரை, பிச்சாங்கரை, உலக்குருட்டு, வடக்குமலை, போடிமெட்டு போன்ற பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்தது. அதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாங்காய்கள் அனைத்தும் உதிர்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

போடியில் புயலால் சேதம்டைந்த மாங்காய் தோப்புகள் மற்றும் போடிமெட்டு மலைச்சாலையை மேற்பார்வையிட்டார் முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். போடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், அங்குள்ள விவசாயிகளிடம் இந்த புயலால் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து பேசினார். கொச்சின் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் போடிமெட்டில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டுவரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

இன்று மற்றும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மலை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cyclone tauktae ops visited cyclone damaged areas in bodi mettu

Next Story
News Highlights : கரிசல் இலக்கியத்தின் தந்தை; எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express