/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-06-02T160649.712.jpg)
Tamil Nadu News: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவுத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, முன்னா மற்றும் சோட்டு என்கிற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த அறிமுகத்தை முதற்கட்டமாக, சென்னை திருவல்லிக்கேணியில் அமைக்கப்பட்டிருக்கும் நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரவேற்பை வைத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.958 விலைக்கும், ஐந்து கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.1515 விலைக்கும் நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
சமையலுக்கான கேஸ் சிலிண்டரில் இருந்து தீர்ந்து விட்டவுடன், அதற்கான தொகையை செலுத்தி நிரப்பி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
சிலிண்டரில் கேஸ் நிரப்புவதற்கு, இந்த மாதம் இரண்டு கிலோ கேஸின் விலை ரூ.250 ஆகவும், ஐந்து கிலோ கேஸின் விலை ரூ.575 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு மற்றும் ஐந்து கிலோ எடைகளில் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.