D Jayakumar | Thirumavalavan | Aiadmk | Lok Sabha Election | அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான டி. ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக கூட்டணியில் இணையுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் இருந்தால், அக்கட்சிக்கு எவ்வித பலனும் இல்லை. மேலும், அவர்கள் (தி.மு.க) கேட்ட தொகுதியை கொடுக்கப் போவதும் இல்லை. ஆகவே, தொல். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொல். திருமாவளவன் தற்போதுவரை தி.மு.க., காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் உள்ளார். கடந்த காலங்களில் அவர் 4 தொகுதிகள் கேட்டிருந்தார்.
இதில் ஒரு பொதுத்தொகுதியும் அடங்கும்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஊடகத்தினரை சந்தித்த தொல். திருமாவளவன், 3 தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது, பொதுத்தொகுதி தொடர்பாக அவர் எதுவும் பேசவில்லை.
தொல். திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அக்கட்சியின் சனாதன கருத்துக்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“