டி. ஜெயக்குமார்- கே. பாலகிருஷ்ணன் சந்திப்பு: எங்கே, எப்போது?
சென்னையில் அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு அதிமுக மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisment
கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வியில் உயரம் தொட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அதிநவீன பல்கலைக்கழகங்களை குறுகிய காலத்தில் நிறுவி பள்ளி கல்வியோடு படிப்பை நிறுத்திய மாணவர்களை பல்கலைக்கழக படியேற வைத்தவர் நம் வாத்தியார் எம்.ஜி.ஆர்!
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் மரியாதை தெரிவித்துக் கொண்டனர்.
வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்து தேர்தலை சந்திக்க உள்ளது. ஏற்கனவே அக்கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது.
திமுக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில் கே. பாலகிருஷ்ணன், டி ஜெயக்குமார் சந்திப்பு அரசியல் பேச்சை தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“