ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளைரை தேர்வு செய்வதற்கான படிவம் ஓபிஎஸ் தரப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இடையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஈரோடு கிழக்கு பகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுதி செய்ய வேண்டும் என்று குறுகிய காலம் இருப்பதால் அதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என்று அறிவுறித்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் : ” உச்சநீதிமன்றம் ஆணைப்படை ஈரோடு இடைதேர்தல் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். தமிழ்மகன் உசேன் வாட்ஸ் ஆப்பிலிருந்தும், ஸ்பீட் போஸ்ட், சிலருக்கு நேரடியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதோ அதன் வழிகாட்டுதல் படி செய்திருக்கிறோம்.
ஓ.பி.எஸ் தரப்புக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். ஸ்பீட் போஸ்ட், தமிழ்மகன் உசேன் வாட்ஸ் ஆப்பிலிருந்து அனுப்பினோம். கூடுதலாக இமெயில் செய்துள்ளோம். ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவது, தொடர்பாக அவர்கள்தான் முடிவு செய்யமுடியும். அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. 7-ம் தேதிதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், அதற்கு முன்பாக அவர்கள் நிலைபாட்டை வெளிப்படுத்துவார்கள். இரட்டை இலை சார்பாக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “ இதை கட்சிதான் முடிவு செய்யும்” என்று கூறினார்.
உட்கட்சி விவாகரத்தில் பாஜக தலையிட்டது கிடையாது. ஒரு தோழமை கட்சியாக அவர்கள் கருத்துக்கள் சொல்லாம். அந்த கருத்தை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பதை கட்சி முடிவு செய்யும்” என்று கூறினார்.