சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களை பொறுத்தவரை டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் குறித்து விவாதித்து எங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
2024 மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு. பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே” என்றார்.
தொடர்ந்து கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “அன்றும், இன்றும் நாளையும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
மேலும், “ஓ.பன்னீர் செல்வத்தை ஆண்டி என்று விமர்சித்த ஜெயக்குமார் அவர் கூட இருக்கும் 4 பேரை திருப்திப்படுத்த அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்தின் நோக்கம் அதிமுகவை ஆட்சிக்கு வர வைக்கக் கூடாது என்பதே. தனக்கு தேவையில்லாத பாலை கீழே கொட்ட அவர் நினைக்கிறார்.
அவர்கள் நடத்தியது ஒரு நிறுவனத்தின் கூட்டம். அவரால் ஒன்றிணைக்க முடியாது” என்றார். சி.வி. சண்முகம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “அதிமுகவின் வெற்றிக்கு தேவையான விஷயங்கள் குறித்து பேசினோம்” என்றார்.
மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு, “இது அதற்கு சரியான நேரம் அல்ல. அதற்கு இன்னமும் ஓராண்டு உள்ளது. நாங்கள்தான் யாருக்கு எத்தனை சீட் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/