டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி ஆலை நிறுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் உலக தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை 2030 ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்கு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வீடு பராமரிப்பு , தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், விழுப்புரம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் முதலமைச்சர் முன்னிலை கையெழுத்தானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“