தமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா; 119 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 119 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 119 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 119 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 129 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 70,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழத்தில் இதுவரை மொத்தம் 32 லட்சத்து 25 ஆயிரத்து 805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று மட்டும் 68,179 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில், 31 லட்சத்து 9 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,020 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 53,336 பேர்கள் என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,09,117 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக, செங்கல்பட்டு-397, திருவள்ளூர்-396, காஞ்சிபுரம்- 393, தேனி- 360, தூத்துக்குடி-251, ராணிப்பேட்டை- 219, திருவண்ணாமலை -222, கோவை -217, விருதுநகர்-193, தென்காசி-173, சேலம்-165, நெல்லை- 162, தஞ்சை-155, வேலூர் -149, கடலூர்- 146, புதுக்கோட்டை- 139, திண்டுக்கல்-131, கன்னியாகுமரி-127, மதுரை-107, திருச்சி-96, கள்ளக்குறிச்சி-86, நாகப்பட்டினம்-69, விழுப்புரம்-67, ஈரோடு-66, கிருஷ்ணகிரி- 60, ராமநாதபுரம்- 60, திருப்பத்தூர்-58, திருவாரூர்- 51, சிவகங்கை-50, திருப்பூர்- 42, நாமக்கல்- 35, பெரம்பலூர்-32, கரூர்-32, தர்மபுரி - 29, நீலகிரி - 10 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.
சென்னையில் பல நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று 1000க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் இன்று 989 தொற்று பதிவாகி உள்ளது. இதனால், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக தெரிகிறது. ஆனால், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"