வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை சோழிங்கநல்லூரில் 50,000 பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 14ம் தேதி தொடங்கி 15, 16 தேதிகளில் மிக கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 14-ம் தேதி சென்னையில் 6.45 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை மழையும் அக்டோபர் 15-ம் தேதி 11.6 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மழையும் அக்டோபர் 16-ம் தேதி 20.4 செ.மீ-க்கு மேல் மழை பொழியும் என்றும் அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் 6.45 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை மழையும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, சென்னைக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு செனனி வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன் ஏற்பாடு நடவடிக்கைகள் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. நிகழ்நேர வானிலை அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 1913 என்ற உதவி எண்களை அறிவித்துள்ளது. மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள பகுதிகளில் விரைவாக மழைநீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வடகிழக்கு பருவமழை காலத்தில், பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் சோழிங்கநல்லூரில் 50,000 பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4,000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னை சோழிங்க நல்லூரில் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் அரை லிட்டர் கொண்ட 50,000 பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.