Advertisment

தலித் சிறுவன், பாட்டி மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்; 2 கல்லூரி மாணவர்கள் கைது

பள்ளிக்குச் செல்லும் போது, அவர்களில் சிலரைப் பார்த்து சிரித்ததாக தாக்குதல் நடத்தியவர்கள் நினைத்ததால் தான் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தலித் சிறுவன் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dalit boy and grandmother attacked by upper-caste people, 2 college students held in Karur, தலித் சிறுவன், பாட்டி மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல், கரூரில் தலித் சிறுவனைத் தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது, tamil nadu dalit attack, tamil nadu dalit family attacked, tamil nadu dalit minor attacked, tamil nadu news

கரூரில் தலித் சிறுவன், பாட்டி மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்; 2 கல்லூரி மாணவர்கள் கைது

பள்ளிக்குச் செல்லும் போது, அவர்களில் சிலரைப் பார்த்து சிரித்ததாக தாக்குதல் நடத்தியவர்கள் நினைத்ததால் தான் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தலித் சிறுவன் தெரிவித்தார்.

Advertisment

கடந்த வாரம் கரூர் மாவட்டத்தில் ஆதிக்க சாதியினரால் 14 வயது தலித் சிறுவன் மற்றும் அவனது பாட்டி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இரண்டு சிறார் பள்ளி மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். தலித் சிறுவன் மற்றும் அவனது பாட்டி மீது தாக்குதல் நடதப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் பட்டியல் சாதிகள்/பட்டியல் இனத்தவர் மற்று பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 10 ஆம் வகுப்பு படிக்கும் தலித் சிறுவன் கடந்த வாரம் பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் போது உயர் சாதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு சிறுவனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள், அந்த 12-ம் வகுப்பு படிக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுவன் இன்னும் சிலருடன் உப்பிடமங்கலத்தில் உள்ள தலித் சிறுவனின் வீட்டிற்கு வந்து அவனையும் அவனது பாட்டி காளியம்மாளையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்தனர்.

பெற்றோர் இருவரையும் இழந்த தலித் சிறுவனையும், அவனது பாட்டியையும், கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாதிக்கப்பட்டவர்களை 20-க்கும் மேற்பட்டோர் தாக்கியதாகவும், அவர்களின் வற்புறுத்தலுக்குப் பின்னரே போலீஸார் கைது செய்ததாகவும் கூறினார்.

மேலும், “அவர்களில் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். கரூரில் தலித்துகள் மீது ஏராளமான சாதி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வி.சி.க தலைவர் ஒருவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய தலித் சிறுவன், அவர்களில் சிலரை பார்த்து சிரித்ததாக நினைத்து உயர்சாதியினர் தன்னை தாக்கியதாக கூறினார்.

“நான் என் நண்பனுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, என் நண்பன் செய்த நகைச்சுவையைப் பார்த்து சிரித்தேன். என்னை ஏன் அவர்களைப் பார்த்து சிரித்தேன் என்று அவர்கள் எனது சாதியைக் குறிப்பிட்டு கேட்டார்கள். நான் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. நான் என் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். மீண்டும் அதே பேருந்தில் பயணம் செய்தால் அடித்து விடுவதாக மிரட்டினர். அடுத்த நாள், அதே பேருந்தில் இருந்த என்னை அவர்கள் அடித்தனர். நான் மாமாவிடம் தெரிவித்தேன். வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தோம். இதையறிந்த அவர்கள் தங்கள் நண்பர்களுடன் வந்து என்னையும், பாட்டியையும் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்களில் சுமார் 20 பேர் இருந்தனர்” என்று கூறினார்.

தலித் சிறுவன் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸார் ஆகஸ்ட் 26-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். மேலும், 17 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறார்களை கைது செய்தனர். அவர்கள் மீது ஐ.பி.சி பிரிவுகள் 294 பி (ஆபாசமான செயல்கள்) மற்றும் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பட்டியல் இனத்தவர் / பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரண்டு சிறார்களும் சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே 17 வயது தலித் சிறுவனையும் அவனது 14 வயது சகோதரியையும் ஆதிக்க சாதி மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கரூரில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment