முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (வயது 74) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
Advertisment
தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945-ம் ஆண்டு பிறந்தார். சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த இவர், 1970களில் ராணுவத்தில் பணிபுரிந்தார். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றிருந்தார்.
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
மத்திய அமைச்சர் பதவி : 1990களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். 1998-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.
பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் சார்பாக திருச்சி லோக்சபா தொகுதியில் 2001-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யாகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் தலித் எழில்மலை.
சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தலித் எழில்மலை உயிர் பிரிந்தது. அவரது உடல். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் எழில் கரோலின், தலித் எழில்மலையின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil