கன்னியாகுமரி மாவட்டம் இறச்சக்குளம் அருள்ஞானபுரத்தில் உள்ள மார்பளவு அம்பேத்கர் சிலையை அகற்றிவிட்டு முழு உருவ சிலை வைக்க வேண்டும் என தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனது போராட்டத்தை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்தார். இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் அவர் கூறுகையில், “பெருந்தலைவர் காமராஜர் சிலை நாளை திறக்கப்படுவதை நாங்கள் மனமாற வரவேற்கிறோம்.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவ முடியவில்லை. 10 ஆண்டுகளாக எங்களது கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியம் செய்துவருகின்றனர்.
அதிகாரிகளின் உத்தரவாதத்தை தொடர்ந்து இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“