குமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்

Meme Video on Vasanthakumar MP: கன்னியாகுமரியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள சாலையின் வீடியோவுடன் வசந்த் அண்ட் கோ விளம்பரப் பாடலை இணைத்து மீம் செய்து காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை விமர்சித்துள்ளனர்.

Vikravandi, Nanguneri By Election Live Updates
Vikravandi, Nanguneri By Election Live Updates

Meme Video on Vasanthakumar MP: கன்னியாகுமரியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள சாலையின் வீடியோவுடன் வசந்த் அண்ட் கோ விளம்பரப் பாடலை இணைத்து மீம் செய்து காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை விமர்சித்துள்ளனர்.

பிரபல வசந்த் அண்ட் கோ உரிமையாளரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தொலைக்காட்சியில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் “அது அந்தக் காலம்.. அது அது வசந்த் அண்ட் கோ காலம்…” என்ற விளம்பரம் மிகவும் பார்வையாளர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற விளம்பரம். அந்த விளம்பரத்தில் டி.வி. ஆண்ட்டெனா, ரேடியோ காலம் முதல் தற்போது டிடிஎச், ஸ்மார்ட் டிவி காலம் வரை வசந்த் அண்ட் கோ நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் சேவையில் ஈடுபட்டுவருவதாக அந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த விளம்பரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த டி.வி ஆண்ட்டெனா, ரேடியோ பெட்டி போன்றவற்றைக் காட்டுவது பலரையும் ஈர்ப்பதாக இருந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதை சிலர் படம்பிடித்து அதனுடன் வசத் அண்ட் கோ நிறுவனத்தின் புகழ்பெற்ற விளம்பரப் பாடலான “அது அந்தக் காலம்… அது வசந்த் அண்ட் கோ காலம்” என்ற பாடலை இணைத்து மீம் செய்து வசந்தகுமாரை விமர்சித்துள்ளனர். மேலும், அந்த மீமை டுவிட் செய்து பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பியாக இருந்தபோது சாலைகள் நன்றாக இருந்ததாகவும் தேர்தலில் வசந்தகுமார் வெற்றி பெற்று எம்.பியான பிறகு சாலைகள் பராமரிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளனர்.

இந்த மீம் விமர்சன வீடியோவை பாஜகவினர் காங்கிரஸ் கட்சிக்கும் எம்.பி வசந்தகுமாருக்கும் அவப்பெயரை உருவாக்குவதற்காக பொய் பிரசாரம் மேற்கொண்டுவருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Damaged road in kanyakumari vasanthco add video meme criticized on congress mp vasanthakumar

Next Story
அண்ணா பிறந்தநாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதைArignar Anna Birth Anniversary celebration Anna Birthday, Former CM Tamil nadu Anna, DMK leader Anna, DMK Anna, அண்ணா பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா, aiadmk party. DMK President MK Stalin, c.n.annadurai previous offices, arignar anna speech in tamil, c n annadurai family, c n annadurai quotes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express