/indian-express-tamil/media/media_files/7I7hznfSgA2YkyYVajqG.png)
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை தருமபுரத்தின் 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் பிரசவத்தின்போது இறந்து போன தனது தாயின் நினைவாக இரண்டு ஏக்கர் நிலத்தில் இதனை கட்டினார்.
இந்த மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் ஆங்கிலேய கவர்னர் சர் ஆதர் ஜேம்ஸ் ஹோப் அடிக்கல் நாட்டினார். அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி திறந்துவைத்தார்.
இந்த மருத்துவமனை கடந்த 5 ஆண்டுகள் வரை செயல்பட்டுவந்தது.
தற்போது பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையை இடித்துவிட்டு அதில் குப்பை கிடங்கு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் நம் முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.