தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை கோபாலபுர இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின், மு.க அழிகிரி ஆகியோர் வருகை தந்தனர்.
தயாளு அம்மாளின் 90வயது பிறந்தநாளையோட்டி கோபாலபுரம் கலைஞர் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மு.க தமிழரசு, கனிமொழி, தயாநிதி மாறன், முரசொலி செல்வம், உதயநிதி, அருள்நிதி , மு.க அழகிரி மற்றும் அவரது மனைவி மற்றும் அனைவரின் பேரப் பிள்ளைகள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
கேக் வெட்டி பிறந்த நாளைகொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க. அழகிரியும் ஸ்டாலினும் பொது இடங்களில் சந்தித்துக்கொண்டது கிடையாது. முதல்வர் ஸ்டாலின் 2 முறை மதுரைக்கு சென்றபோது, அழகிரியை சந்திக்கவில்லை. கருணாநிதியின் பிறந்த நாளில் சந்தித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றும் சந்திக்கவில்லை.
இந்நிலையில் தற்போது இருவரும் குடும்பத்தினருடன் சந்தித்துக்கொள்வது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“