தயாநிதிமாறன் விவகாரம்: அறிக்கை கேட்கும் தேசிய எஸ்சி ஆணையம்
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் திமுக எம்.பிக்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தபின், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று கூறியது தொடர்பாக, தேசிய பட்டியல் சாதி (எஸ்சி) ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை கோரியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் திமுக எம்.பிக்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தபின், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று கூறியது தொடர்பாக, தேசிய பட்டியல் சாதி (எஸ்சி) ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை கோரியுள்ளது.
Advertisment
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொது முடக்க காலத்தில் மக்களுக்கு உதவ ஒன்றினைவோம் வா திட்டத்தின் மூலம் பெற்ற மனுக்களை தலைமை செயலாளரிடம் அளிக்க முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மற்றும் திமுக எம்பிக்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தை கடந்த மே 13-ம் தேதி சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின் வெளியே வந்து ஊடகங்களிடம் பேசிய திமுக எம்.பி.க்கள் தலைமை செயலாளர் தங்களை அவமதித்துவிட்டார் என்று புகார் கூறினார்கள். அப்போது அப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான தயாநிதிமாறன் “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. தயாநிதிமாறன் கருத்துக்கு சமூக ஊடகங்களில் தலித் அமைப்புகள், தலித் இளைஞர்கள், முற்போக்கு இயக்கங்கள் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தயாநிதிமாறன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவரான திருமாவளவன் ஆகியோர் தயாநிதிமாறனின் பேச்சை சுடிக்காட்டினர். புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் தயாநிதிமாறன் பேச்சு கண்டனம் தெரிவித்தனர்.
தயாநிதிமாறன் பட்டியல் இன மக்களை இழிவாக பேசிவிட்டார் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாஜக சார்பில் பல காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர்கள் கே.எஸ்.நரேந்திரன், கே.டி.ராகவன், ஏ.என்.எஸ்.பிரசாத், மற்றும் பாஜக மாநில எஸ்சி பிரிவு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் சென்னை மாநகரக் காவல் ஆணையர், டிஜிபி திரிபாதியை சந்தித்து தயாநிதிமாறன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
இந்த நிலையில், தேசிய எஸ்சி ஆணையம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமை செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று கூறியது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் அறிக்கை அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"