/tamil-ie/media/media_files/uploads/2017/11/dayanidhi-maran-759.jpg)
திமுக எம்.பி தயாநிதி மாறன்
Dayanidhi Maran in the Lok Sabha : நாடாளுமன்ற மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கலாகி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவை, சட்டப்பேரவை உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த மசோதா குறித்து திமுக எம்.பி. ஆ. ராசா பேசுகையில், சனாதன சர்ச்சையை பாஜகவினர் எழுப்பினர். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தயாநிதி மாறன் ஆட்சேபம் தெரிவித்தார்.
அவர் கோபமாக பேசிய காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக கனிமொழி பேசும்போது மற்ற உறுப்பினர்கள் இடைமறித்து இந்தியில் பேசினார்.
இதனால் கோபமுற்ற கனிமொழி, தமக்கு இந்தி தெரியாது எனப் பதிலளித்தார். மேலும் ஒரு வார்த்தையை ஒருமையிலும் பேசினார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், “மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தேர்தல் நாடகம்” என விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் மக்களவையில் குற்றஞ்சாட்டினார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும் எதிராக 2 பேரும் வாக்களித்துள்ளனர். இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா அடுத்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக பேசிய சபாநாயகர், “மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படும்பட்சத்தில் மாநில அவையில் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.