Advertisment

தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் குற்றச்சாட்டு: ஆளுனர் மாளிகை விளக்கம்

ஆளுனர் ஆர்.என். ரவி மகள் திருமணம் தொடர்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RN Ravi

ஆளுனர் ஆர் என் ரவி மகள் திருமணத்தின்போது அரசு பணம் செலவிடப்பட்டதாக தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன், ஆளுனர் ஆர்.என். ரவி மகள் திருமணம் கவர்னர் மாளிகை செலவில் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், “ஆளுனரின் குடும்ப விழாவில் அரசு பணம் செலவழிக்கப்பட்டதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

Advertisment

அந்தத் தகவல்கள் தவறானவை மற்றும் விபரீதமானவை என்பது பொதுவெளியில் அறியப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 21-22ஆம் தேதிகளில் கவர்னர் குடும்ப நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது.

அப்போது ஆளுனரின் விருந்தினர்கள் தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். ஆளுனர் மாளிகையில் அல்ல. ஆளுனரின் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தவும் தனியார் வாகனங்கள் வாடகைக்கு பணியமர்த்தப்பட்டன.

அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. தனியார் மூலம் உணவு வழங்கப்பட்டது. ராஜ்பவன் சமையல் அறையில் இருந்து அவர்களுக்கு ஒரு காபி கூட வழங்கப்படவில்லை.
முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகளும் ராஜ்பவனில் இருந்து இல்லாமல் ஒரு தனியார் மூலம் நடத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment