6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisment
தமிழ்நாடு காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், மாதாந்திர உதவித் தொகையா ரூ.3000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
காது கேளாத மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இந்த போராட்டத்தில், அரசு அலுவலகங்களில் வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், தொழில் முனைவராக உயர்வதற்கு அரசு சார்பில் ஆவின் பாலகம் அமைத்து தரவேண்டும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனுபவமிக்க ‘சைகை மொழி’ ஆசிரியர்களுக்கான பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைளை போராட்;டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தம் கவனம் பெரும் வகையில். காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சைகை மொழியில் தங்களது கோரிக்கைகளை வலியுறத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு ‘செவி சாய்த்து’ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தினர்.
எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“