Debate on Tamil Nadu Budget 2019-20 Updates: தமிழக சட்டப்பேரவையில் 2019 - 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், கடந்த 8ம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று(பிப்.11) தொடங்கியது.
தமிழக சட்டசபையில், 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த 8ம் தேதி, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடியது.

இன்று முதல், வரும் 13ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுவார்கள். எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர்.
இன்று, 11-ம்தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது.
12-ம் தேதி இரண்டாம் நாளும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
13-ம் தேதி 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசி முடித்து விடுவார்கள்.
கூட்டத்தின் கடைசி நாளான, 14-ம் தேதி, துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம், விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுவார். இந்தக் கூட்டத் தொடரில், ஜாக்டோ ஜியோ போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கஜா புயல் பாதிப்பு, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TamilNadu Budget 2019-20 Debate : தமிழக பட்ஜெட் மீதான விவாதம்
11:41 AM - சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, "அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.
11:28 AM - ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.
11:00 AM - 'தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10:00 AM - தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இன்று முதல் 13ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
